புதன், 14 ஆகஸ்ட், 2013

மரண தண்டனை என்பது மிக மிகப் பழைமையான ஆட்சி முறைகளில் இருந்த காட்டுமிராண்டித்தனமான தண்டனை முறை. உலகம் வெகுவாக நாகரிகமடைந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய காலக்கட்டத்திலும் அதைப் பின்பற்றுவது பிற்போக்குத்தனமானது. அந்தக் காலத்தில் மாட்டு வண்டிகளில் பயணித்தோம். இன்று...? அன்றைய நாட்களில் எழுத்தாணியில் எழுதினோம். இன்றைக்கு...? அன்று புறாவிடு தூது. இன்று...? வாழ்க்கைத் தரமும் ஆட்சித் தரமும் இப்படிப் பொருள் அளவில் (materialistic)முன்னேறினால் மட்டும் போதாது. பண்பளவிலும் முன்னேற வேண்டும். அதுதான் உண்மையாக சமூக வளர்ச்சியாக இருக்க முடியும். அது மட்டுமின்றி, எல்லாக் குற்றங்களுக்குமே ஏதோ ஒரு வகையில் ஆட்சியாளர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்பது நன்கு சிந்தித்துப் பார்த்தால் புரியும்! எனவே நடந்த குற்றத்துக்குக் குறிப்பிட்ட அந்தக் குற்றவாளியை மட்டுமே பொறுப்பாக்கும் வகையில் அவருக்கு மரண தண்டனை அளிப்பது அவருக்கு இழைக்கும் கொடுமை மட்டுமில்லை, ஆட்சியாளர்களின் தவறுகளை மக்கள் பார்வையிலிருந்து மறைத்து தொடர்ந்து அப்படிப்பட்ட குற்றங்களைப் பலரும் செய்யவும், தொடர்ந்து சமூகம் பாதிக்கப்படவும் வழி வகுப்பதாகும்! ஆனால், இவற்றையெல்லாம் இந்திய அரசியலாளர்களுக்குப் புரிய வைக்கவா முடியும்?... மரண தண்டனை மட்டுமா இவர்களின் முரண்பாடான கொள்கை? நீங்கள் குறிப்பிட்ட இதே பெருமக்கள் பிறந்த இந்த நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில்தான் ஆயுத அடக்குமுறைச் சட்டம் என்னும் பெயரில் இந்த இந்திய அரசு அப்பாவிக் குடிமக்களையே சிட்டுக்குருவிகளைப் போல் சுட்டுத் தள்ளுகிறது! பொதுமக்களிடமே காட்டாத இரக்கத்தை இந்திய அரசு குற்றவாளிகளிடம் காட்டும் என நாம் எதிர்பார்த்தால் நம்மை விட முட்டாள்கள் வேறு யாராவது இருக்க முடியுமா?

கருத்துகள் இல்லை: