பிப் 28/2013: இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விவாதம் விவாதம் இன்று ராஜ்யசபாவில் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர், இலங்கையை எதிரி நாடாக பார்க்க முடியாது என்றும், இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி இப்போது கூற இயலாது என்றும் கூறினார்.
சிந்திக்கவும்: இந்த நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்புகளில் ஒன்று இலங்கையிலே நடந்தேறியது. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப்போனார்கள்.
வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள். போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது.
இந்தனை நடந்தும், இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது இந்தியா. ஆறரை கோடி மக்களை கொண்ட தனது நாட்டின், ஒரு மாநிலத்து மக்களின் உணர்வுகளை மதிக்காது, காலில் போட்டு மிதிக்கும் இந்தியாவை இனி தமிழர்கள் அந்நிய நாடாக கருத வேண்டும். இலங்கையை எதிரி நாடக பார்க்க முடியாது என்று இந்திய வெளிவுறவு துறை அமைச்சர் சொல்லி விட்டார். அதானால் நாம் இந்தியாவை எதிரி நாடாக பார்க்க வேண்டியதுதான்.
உலகமே மனித உரிமை மீறல் நடந்திருகிறது, போர் குற்றம் நடந்திருக்கிறது என்று சொல்லும் பொழுது இந்தியா மவுனம் காப்பது ஏன்? எதிரி ராஜபக்சேவையும், இலங்கையும் கூட மன்னித்து விடலாம். ஆனால், துரோகி இந்தியாவை மன்னிக்க முடியாது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முதல் இப்பொழுது நடந்த இன அழிப்பு போர் குற்றம் வரை அனைத்துக்கும்.இந்தியாவே முழுமுதல் காரணம்.
இலங்கையில் ஆதிக்கம். செலுத்த வேண்டும் என்கிற இந்தியாவின் வல்லரசு போதைக்கு இரையாக விடுதலை புலிகள் முதல் அனைத்து போராளி இயக்கங்களுக்கும் இந்தியாவில் வைத்து பயிற்சி கொடுத்து இலங்கை உள்நாட்டு போரை முன்னின்று நடத்தியதே இந்தியாதான், இலங்கை அரசோடு அனுசரணை ஏற்பட்டதும் தமிழ் போராளிகளை ஒடுக்க அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை அனுப்பியது இப்படி ஈழத்தில் நடந்த அனைத்து துர்சம்பவங்களுக்கு இந்தியாவே முற்றிலும் காரணம்.

தமிழ் மக்கள் கூட்டம் ராணுவத்திடம் சரணடைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது ராணுவம். வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர்.
வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள். போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது.
இந்தனை நடந்தும், இலங்கைக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது இந்தியா. ஆறரை கோடி மக்களை கொண்ட தனது நாட்டின், ஒரு மாநிலத்து மக்களின் உணர்வுகளை மதிக்காது, காலில் போட்டு மிதிக்கும் இந்தியாவை இனி தமிழர்கள் அந்நிய நாடாக கருத வேண்டும். இலங்கையை எதிரி நாடக பார்க்க முடியாது என்று இந்திய வெளிவுறவு துறை அமைச்சர் சொல்லி விட்டார். அதானால் நாம் இந்தியாவை எதிரி நாடாக பார்க்க வேண்டியதுதான்.
உலகமே மனித உரிமை மீறல் நடந்திருகிறது, போர் குற்றம் நடந்திருக்கிறது என்று சொல்லும் பொழுது இந்தியா மவுனம் காப்பது ஏன்? எதிரி ராஜபக்சேவையும், இலங்கையும் கூட மன்னித்து விடலாம். ஆனால், துரோகி இந்தியாவை மன்னிக்க முடியாது. இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் முதல் இப்பொழுது நடந்த இன அழிப்பு போர் குற்றம் வரை அனைத்துக்கும்.இந்தியாவே முழுமுதல் காரணம்.
இலங்கையில் ஆதிக்கம். செலுத்த வேண்டும் என்கிற இந்தியாவின் வல்லரசு போதைக்கு இரையாக விடுதலை புலிகள் முதல் அனைத்து போராளி இயக்கங்களுக்கும் இந்தியாவில் வைத்து பயிற்சி கொடுத்து இலங்கை உள்நாட்டு போரை முன்னின்று நடத்தியதே இந்தியாதான், இலங்கை அரசோடு அனுசரணை ஏற்பட்டதும் தமிழ் போராளிகளை ஒடுக்க அமைதி படை என்கிற ஆக்கிரமிப்பு படை அனுப்பியது இப்படி ஈழத்தில் நடந்த அனைத்து துர்சம்பவங்களுக்கு இந்தியாவே முற்றிலும் காரணம்.
பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சுட்டு கொல்லபட்டது முதல் இத்தனை அநியாயங்களுக்கும் இந்தியா ஒரு கண்டனனமாவது தெரிவித்த்ருக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக