மார்ச் 08: இன அழிப்பு பயங்கரவாதி ராஜபக்சேக்கு எதிராக தமிழர்களும், உலக நாடுகளும் குரல் எழுப்புவது இந்தியாவின் காதுகளுக்கு கேட்கவே இல்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போல மவுனம் காக்கிறது.
பாராளுமன்றத்தில் இலங்கை பற்றி நடந்த சிறப்பு விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் இந்திய அரசை செருப்பால் அடிக்கும் விதத்தில் கேள்விகளை கேட்டார். அவரது கேள்விகளுக்கு நாட்டை ஆளும் கோட்டான்கள் பதில் சொல்லுமா?
இலங்கை தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர செயல்களுக்கு எதிராக நீங்கள் (இந்தியா) எதிர்ப்பு தெரிவித்தீர்களா?
உலக அரங்கில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்கும் என்று ஜவகர்லால் நேரு கூறி இருக்கிறார். இந்த கொள்கையை இந்திய அரசு பின்பற்றத் தவறியதின் விளைவுதான் இலங்கை நடந்த தமிழர் படுகொலைக்கு காரணமாக அமைந்தது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குழப்பம் இருக்கிறது.
மேலும் சோனியாகாந்தியை பார்த்து சோனியாஜி, நீங்கள் ஏன் மவுனம் காக்கிறீர்கள்? உங்களிடம் மத்திய அரசை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக எடுத்த நடவடிக்கை என்ன என்பதை உங்களுக்கு பின்னால் அமர்ந்திருக்கிற பிரதமரையும், வெளியுறவுத்துறை மந்திரியும் கேளுங்கள். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு தேவைதான். அதற்காக நமது சொந்த மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உரித்தான விஷயங்களை நாம் எடுத்துச் சொல்லக்கூடாது என்பதல்ல என்று பேசினார்.
சிந்திக்கவும்; முலாயம்சிங்குக்கு தெரிந்த உண்மை நமது மெத்த படித்த பொருளாதார புலி மண்ணு மோகன் சிங்குக்கு தெரியாமல் போனாதேனோ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக