வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் பங்கெடுப்பு !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் நான்காம் ஆண்டு கூட்டுநினைவு நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாட்டில், இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் அவர்கள் பங்கெடுக்கின்றார்.



டெல்லி தமிழ்வழங்கறிஞர் சங்கத்தின் செயலராகவும் உள்ள வழக்கறிஞர் வே.ராம் சங்கர், இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவாகவுள்ளார்.

எதிர்வரும் மே-18ம் நாள் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு, இன்று புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சிலவேனியா மாநிலத்தில் மாநாடு அங்குராப்பண நிகழ்வுடன் தொடங்குகின்றது.

இம்மாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து தமிழர் மற்றும் தமிழரல்லாத வள அறிஞர்கள் பலரும் பங்கெடுத்துக் கொள்வதோடு 20க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்கின்றனர்.

இப்பெரும் நிகழ்வில் பங்கெடுக்கச் சென்றுள்ள வழக்கறிஞர் வே.ராம் சங்கர் அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் கலங்கரை விளக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைகின்றதென புகழாரம் சூட்டியிருப்பதோடு, தமிழர்களின் நலனைப் பேணிக்காக்கவும் தமிழீழத்தினை அமைத்திடவும், உலகலாவிய தமிழ் மக்களிடையே ஒற்றுமைமைய உருவாக்க உதயமாகிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தற்போது நமக்கான அரசியல் சாசனத்தினை உருவாக்கி அதனை உலக நாடுகள் அங்கீகரிக்க பல்வேறு முயற்கிளை எடுத்து வருவதனை வரவேற்றுள்ளார்.

உலக வரலாற்றிலேயே முன்னோடியாக இந்த அரசாங்கம் திகழுகின்றதென தெரிவித்துள்ள வழக்கறிஞர் வே.ராம் சங்கர் அவர்கள் , ஈழத் தமிழர்களுக்கான ஒர் அரசாங்கத்தினை அமைத்து அதனை உலகம் சுதந்திர தமிழீத்தினை உருவாக்க பாடுபடும் முயற்சியினை பாராட்டுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: