ஞாயிறு, 10 ஜூன், 2012
பட்டுக்கோட்டை பாடல்
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா.
கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் பண்ருட்டியில்
படம் இணைப்பு) நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் பண்ருட்டியில் 29.08.2010 அன்று நடைபெற்றது .இக்கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் தமிழர் திரு .சலதீபன் தலைமை தாங்கினார் .மற்றும்
ஒருங்கிணைப்பாளர்கள் தமிழர் திரு .சாமிரவி , தமிழர் திரு .குப்புசாமி ,தமிழர் திரு .பிரபு ,செயல்வீரர்கள் ௦ தமிழர் திரு .மகா ,தமிழர் திரு .மணி .இக்கூட்டம் அன்னை தெரேசா பொறியியல் கல்லூரி மானவர்கர்லால் ஏற்பாடு செய்யப்பட்டது .இம்மாணவர்கள் 50 பேர் கலந்துகொண்டார்கள்.
நன்றி
வீர வணக்க மரியாதை
கடலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் வீர மரணம் தழுவிய தமிழ் ஈழ விடுதலை புலிகள் அமைப்பின் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் அண்ணன் அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு வீர வணக்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் தமிழர் திரு. தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கடலூர் நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் தமிழர் திரு. சாமிரவி தமிழர் திரு.குப்புசாமி தமிழர் திரு. திவாகரன் மற்றும் செயல் வீரர்கள் கலந்துகொண்டு அண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவன்
நாம் தமிழர் கட்சி
கடலூர் மாவட்டம்
புதிய வரலாறு எழுதிட வாடா….
கவிதை
தோழனே எழுந்து வாடா
துன்பங்கள் இல்லையடா
விழிகளை திறந்து விட்டால்
விடுதலை உன் கையின் எல்லை
தலை நிமிர்ந்து நீயும்
எழுந்து வாடா
தரணியே உனக்காய்
காத்திருக்குது
வெற்றியெல்லாம் உனக்கு
குடைபிடிக்கும்
தடையெல்லாம் உனைக் கண்டால்
பொடிப் பொடியாய் பறக்கும்
இருளுக்கு விடை கொடுத்து
உதயத்தில் முகம் காட்டு
உன்னிடமே உலகமுண்டு
உருட்டி நீ விளையாடு
தொலைந்தவை எல்லாம்
தோல்விகளே
இழந்தவை எல்லாம்
துயரங்களே
சாதிக்கப் பிறந்தவனே
சரித்திரத்தை நீ யெழுது
உணர்விலே உரமேந்தி
இமயத்தை நீ முட்டு
வா வா புதிய இளைஞனே
புயலாய் புறப்பட்டு வாடா
இடி மின்னலும் மழையும்
உனக்காய் பரணி பாடும்
கொள்கையில் மலைபோல
உயர்ந்திட வாடா
வெற்றிக்கு குடைபிடிக்க
காலம் உன்னை அழைக்கிறது
புதிய வரலாறு எழுதிட
வானம் இதழ் விரிக்கிறது.
புலியாய் எழுந்து வாடா….
கவிதை
புயலடிக்கும் தேசத்தில் பூவல்ல- நீ
புலியாய் எழுந்து வாடா
எதிர்வரும் தடைகளை
உடைத்து நீயும் புறப்பட்டு வாடா
விலகிடு இருளே விலகிடு
விடியலின் கதிருக்கு வழிவிடு
எரிமலையும் விலகும் – உன்
மூச்சில் தூள் பறக்கும்
காலத்தை கையிலே கட்டு – உன்
கால்களில் வேகத்தைப் பூட்டு
துணிவினை விழியில் சுமந்து – துயரத்தின்
தூரத்தை நீ கடக்க வேண்டும்
நெற்றியிலே திலகத்தை இட்டு
வானத்தில் விண்மீனை முட்டு
காயங்கள் எல்லாம்
வாழ்வின் கோலங்களே
சாபங்கள் கூட – வரலாறு
தந்த பாடங்களே
கால விளக்கினை
ஒரு போதும் காற்றடித்து
அணைப்பதில்லையே
முன்னேறத் துணிந்து விட்டால்
துணைக்கு வர
சூரியன் மறுப்பதில்லையே
வா வா தோழா
வசந்தம் உன்னை அழைக்கிறது
வானவில்லில் மேகம் – உனக்காய்
பாதை விரிக்கிறது
நெஞ்சிலே தீ சுமந்து
உறுதியெடு தோழா
வெல்வோம் வெல்வோமென
இலட்சிய கருவேந்தி வாடா…
சனி, 9 ஜூன், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)