ஞாயிறு, 10 ஜூன், 2012

புலியாய் எழுந்து வாடா…. கவிதை புயலடிக்கும் தேசத்தில் பூவல்ல- நீ புலியாய் எழுந்து வாடா எதிர்வரும் தடைகளை உடைத்து நீயும் புறப்பட்டு வாடா விலகிடு இருளே விலகிடு விடியலின் கதிருக்கு வழிவிடு எரிமலையும் விலகும் – உன் மூச்சில் தூள் பறக்கும் காலத்தை கையிலே கட்டு – உன் கால்களில் வேகத்தைப் பூட்டு துணிவினை விழியில் சுமந்து – துயரத்தின் தூரத்தை நீ கடக்க வேண்டும் நெற்றியிலே திலகத்தை இட்டு வானத்தில் விண்மீனை முட்டு காயங்கள் எல்லாம் வாழ்வின் கோலங்களே சாபங்கள் கூட – வரலாறு தந்த பாடங்களே கால விளக்கினை ஒரு போதும் காற்றடித்து அணைப்பதில்லையே முன்னேறத் துணிந்து விட்டால் துணைக்கு வர சூரியன் மறுப்பதில்லையே வா வா தோழா வசந்தம் உன்னை அழைக்கிறது வானவில்லில் மேகம் – உனக்காய் பாதை விரிக்கிறது நெஞ்சிலே தீ சுமந்து உறுதியெடு தோழா வெல்வோம் வெல்வோமென இலட்சிய கருவேந்தி வாடா…

கருத்துகள் இல்லை: