தமிழ்த் தேசிய புலவர் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஈழத் தமிழர்களை கொன்றொழிக்க துணை நின்றவனை பழித்து 1988ம் ஆண்டு அறம் பாடிய செய்தியை நாமறிவோம். அவர் விட்ட சாபம் அடுத்த இரண்டாண்டுகளில் முட்டியது. புலவரின் சாபம் இன்னும் மிச்சமிருந்தாலும் புலவர் வாக்கு பொய்க்காது என நிரூபித்தவர் பெருஞ்சித்திரனார் ஐயா அவர்கள்.
அவர் வழிநின்று எவ்வாறு கொடியோனுக்கு அறம் பாடினாரோ அவ்வாறே சிங்களக் கொலைஞனுக்கும் அவர் சகாக்கலுக்கும் அறம் பாட மரந்துவிட்டோம் புலவர்களே. அதை நினைவிற்கொண்டு பெருஞ்சித்திரனார் ஐயா எப்படி பாடினரோ அப்படி பாடுங்கள். காலம்தாழ்த்தாதீர்.
பாடிய அறத்தை உடனடியாய் எமக்கு பகிருங்கள் நாங்கள் உலகத்தீர் முன்வைத்து பொய்யா மொழிப் புலவரை தேர்வு செய்வோம். உங்களுக்காக கருவூலத்தில் பெற்கிழிகள் காத்துகிடக்கின்றன.
இதோ ஐயாவின் பாடல் உங்கள் நினைவிற்கு
இட்ட சாபம் முட்டும்
சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும்
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து
செந்தமிழ் இனத்தைச் சீரழித்திடவே
முந்து இராசீவ் எனும் முன்டையின் மகனே!
யாழ்த் தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம்
போழ்த்துயிர் குடிக்கும் அரக்கப் பூதனே!
நீயுநின் துணையும் நின்னிரு மக்களும்
ஏயுமிவ் உலகத்து இருக்குநாள்தோறும்
என்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதளால்
வெந்தழியும் நாள் விரைந்துனக் கெய்துக!
இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரிஎனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூறாகச் சிதறுக! சூதனே!
திக்கி நா விழுக்க! நெஞ்சு தெறிக்க!
என்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உனக்குளை நொய்ந்தே
முட்டுக நின்னுயிர்! மூளை நீ யாகுக!
தமிழினம் தகிக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!
தணலும் எம் நெஞ்சின் தவிப்பை
மணல், நீர், தீ, வளி, வானம் – ஆற்றுகவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக