புதன், 28 ஆகஸ்ட், 2013

ஜேர்மனியிலிருந்து நல்லூர் சென்ற


தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மானின் சகோதரன் ஞானம். அவர் ஜேர்மனியில் குடும்பத்தோடு கடந்த முப்பதாண்டு காலமாக வாழ்ந்தவர்.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அவர், தனது சகோதரன் பொட்டம்மனுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. 52 வயதான அவர் யாழ். அரியாலையைச் சேர்ந்தவர்.
நல்லூர்கந்தன் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அவர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அரியாலையில் அவருக்குச் சொந்தமான காணியில் ஈ.பி.டி.பியினர் குடியிருந்தனர்.
அந்தக் காணியைவிட்டு அகலுமாறு அவர்ஈ.பி.டி.பி.யினரைக் கேட்டுள்ளார். அதனால் ஆத்திரம் கொண்ட அவர்கள் பொட்டம்மனின் சகோதரன் என இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் அவரை அடையாளம் காட்டியுள்ளனர்.
அவரைபயங்கரவாதிஎன்ற பெயரில் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர். பெரும் சித்திரவதைகளுக்கு அவரை உட்படுத்தினர். பொட்டம்மான் மறைந்திருக்கும் இடத்தைக் கூறுமாறு கேட்டனர். அதைப்பற்றி எந்தத் தகவலும் தமக்குத் தெரியாது என அவர் தெரிவித்த போதும் தொடர்ந்தும் அவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கப்பட்டுள்ளார்.
அதனால் அவரின் உயிர் பிரிந்தது. அவரின் உடல் அரியாலைப் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது. அங்குள்ள அவரின் உறவினர்கள் அவரின் மரணம் தொடர்பாக என்ன கூறவேண்டும் என்பதையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தெரிவித்துள்ளனர்.
ஞானம் மரக்கறி வாங்குவதற்காக ஈருறுளியில் சந்தைக்குச் சென்றார். அங்கே அவர் மாரடைப்பால் மரணமானார்இப்படித்தான் தெவிரிக்க வேண்டும்.
இதற்கேற்ப அவரின் சடலம் மருத்துவ விடுதிக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர்மாரடைப்பினால் மரணமானார் என்ற மரணச்சான்றிதழும் தயாராகிவிட்டது.
அவரின் சடலம் ஜெர்மனிக்கு கொண்டுவரப்படவேண்டும் என ஜேர்மனியிலுள்ள அவரின் மனைவி கேட்ட போதும், இராணுவப் புலனாய்வு பிரிவினர் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவருகின்றனர். இது தொடர்பாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சின் உதவியை அவரின் குடும்பம் நாடியுள்ளது.
வடமாகாணம் முழுமையாக இராணுவக் கட்டப்பாட்டில் இருக்கின்றது என்பதற்கு இக்கொடூரக்கொலையும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
ஐ.நா. சர்வதேச மன்னிப்புச்சபையின் பொறுப்பாளர் திருமதி. நவநீதம் பிள்ளை 25ம் திகதி இலங்கை வருகிறார். அதனால் பல விடயங்கள் இலங்கையின் பேசப்படும் பொருளாக மாறியுள்ளன. அவற்றில் முக்கியமாக:
- மனித உரிமை மீறல்கள்
- காணாமல் போனோர் விடயம்
- ஊடகச் சுதந்திரம் மீறப்படுதல்
- இராணுவ அத்துமீறல்கள்
- போர்க்குற்ற சர்வதேச விசாரணை
- நீதிச்சுதந்திரம் மீறப்படுதல்
என பல விடயங்கள் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
. திருமதி. நவநீதம் பிள்ளை எதிர்வரும் 31ம் திகதிவரை இலங்கையில் தங்கி இருப்பார்.
ஐ.நா. மனித உரிமைப்பேரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப அவரின் விசாரணைகள் நடைபெறவுள்ளன. பேரவையில் ஒரு நாட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அந்த நாட்டின் அனுமதி இன்றியே அங்கு சென்று விசாரணை நடாத்தும் அதிகாரம் சர்வதேச மன்னிப்புச்சபையின் பொறுப்பாளருக்கு உண்டு.
அதன் அடிப்படையில் திருமதி. நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருகிறார்
. ஆனால் இலங்கை அரசு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவருக்கு அழைப்பை அனுப்பியதாகக் குறிப்பிடுகின்றது.
அந்த அழைப்பை ஏற்றுத்தான் அவர் இலங்கை வருகிறார் என வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறிவருகிறார்.ஆனால் ஜெனிவா மனித உரிமைப் பணியகம் வெளியிட்டுள்ள தகவலில் வேறு சில விபரங்களும் nவிளியாகியுள்ளன.
ஜெனிவாப் பணியகம் வகுத்துள்ள அட்டவணையின் பதிவுகள் தயாராகிவிட்டன. பொறுப்பாளர் அதனையே பின்பற்றுவார்.
ஆனால் அவரின் இலங்கைப் பிரயாண அட்டவணை இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை. அரசு சாரா 30 நிறுவனங்களிடமிருந்து திருமதி. நவநீதம்பிள்ளை பல தகவல்களைப் பெற்றுள்ளார்
.அதே நேரத்தில் சகல அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் அவர்
சந்திக்கவுள்ளார். முக்கியமாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான சந்திப்புக்கு அவர் கூடுதல் நேரத்தை ஒதுக்கியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. மீள்குடியேற்றம் இன ஒதுக்கல், போர்க்குற்ற விசாரணை, வடமாகாண சபைத்தேர்தல், தமிழர்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்கள் திருமதி. நவநீதம் பிள்ளையுடன் கலந்தாலோசிக்கப்டும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப் படை அல்லது இராணுவத்தின் விமானங்களை அவர் பயன்படுத்த மாட்டார். அவருடன் மனித உரிமை அமைப்பின் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளும் வருகின்றனர்.
விசாரணையின்போது சில ஆய்வுகளும் மேற்கொள்ள நேர்ந்தால், அதற்கும் தயாராகவே அவர் வருகிறார் என ஜெனிவாப் பணியகம் குறிப்பிடுகின்றது. ஏற்கனவே அவரிடம் சர்வதேச தொண்டர் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்தும் இலங்கை தொடர்பான அறிக்கைகளும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆசிய மனித உரிமை அமைப்பு இவ்வாரம் சமர்ப்பித்துள்ள அறிக்கை காவல்துறையினரின் சித்திரவதை தொடர்பானது. அவ்வாறு சித்திரவதைக்குள்ளான 1500 பேரின் சாட்சிகளுடன் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காலவ்துறையினரின் 1998ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரையான சித்திரவதைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. சித்திரவதைக்குள்ளானோர்
நேரடியாக சாட்சி சொல்லும் ஒலி நாடாக்களும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றை ஆசிய மனித உரிமை அமைப்பு பகிரங்கப்படுத்தியுள்ளதினால் அதனுடன் சம்பந்தப்பட்டவர்
பலருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புண்டு என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.ஆனால், இலங்கை அரசின் முக்கிய அமைச்சர்களுடன் திருமதி. நவநீதம் பிள்ளை பேசும்போது இவற்றை சாட்சிகளாகக் குறிப்பிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே நேரத்தில் யுனிசெப்எனப்படும் ஐ.நா. அகதிகளுக்கான பிரிவின் கொழும்புக்கிளையும் அதிரடியாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. போரின்பின் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மக்கள் பூரணத்துவமாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசு சர்வதேச ரீதியில் அனைத்து தமிழ் மக்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என தீவிரமாகப் பரப்புரை செய்துவருகின்றது. இதனை மறுதலிக்கும் முகமாகவே கொழும்புக்கிளையின் அறிக்கை அமைந்துள்ளது.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் விபரங்களையும், சிறு முகாம்களில் வைக்கப்பட்டுள்ள மக்களின் விபரங்களையும் அது வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், மனித எலும்புக்கூடுகளைக் கொண்ட பாழடைந்த கிணறுகள் யாழ். மாவட்டத்தின் வடமாராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு மீளக்குடியேற்றச் சென்ற தமிழ் மக்களே அவற்றை கண்டுபிடித்தனர்.
ஆனால், தகவலறிந்து உடனடியாக விரைந்து, அவற்றை தமது பொறுப்பில் இராணுவத்தினர் எடுத்துள்ளனர். பல ஆண்டுகாலமாக அப்பபகுதியில் இராணுவமுகாமொன்று இயங்கிவந்தது.
சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் தமிழர்கள் இங்கு கொண்டுவரப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக முன்பு புகாரிடப்பட்டு வந்தது. எனவே, இவை கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என மக்கள் மத்தியில் இப்போதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.
மக்கள் மீள் குடியேறிய இப்பகுதியிலுள்ள பல பாழும் கிணறுகளில் இருந்து நூற்றுக்கும் மேம்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். ஆனால், மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புகூடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் வடமராட்சி கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டஎலும்புக்கூடுகள் விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.
ஆய்வுகள் செய்யப்படவில்லை. காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. காணாமல் போனோரின் மனித எலும்புக் கூடுகளாக இவை இருக்கலாமா என்ற விசாரணையும் இடம்பெறவில்லை. இவ்விடயம் இராணுவத்தினரால் முற்றுமுழுதாக மூடிமறைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிங்களவருக்குள்ள உரிமைகள் தமிழருக்கு வழங்கப்படுவதில்லை என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு என புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இவ்விடயம் இன்று இலங்கைவரும் திருமதி. நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட இருப்பதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனோர் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். உரிமைகள் அமைப்பின் பணியகத்தின் எதிர்வரும் 27ம் திகதி இப்போராட்டம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமயம் திருமதி. நவநீதம் பிள்ளை குழுவினர் யாழ்ப்பாணத்தில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், போராட்டத்தின் இறுதியில் அவரிடம் நேரில் மனு ஒன்றை கையளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போரில் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் குறிப்பிடுவதாக இருந்தால், அது தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோதபாய ராஜபக்ச சவால் விட்டுள்ளார். அவரின் அறிக்கை சகல ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு எதிராக சுமத்தப்படும் பாரிய குற்றச்சாட்டு இது. அதனால் சர்வதேச விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ச்சியாகக் கூறிவருகின்றது.
அதற்கான ஆதாரங்கள் அந்த விசாரணைக்குழுவிடமே சமர்ப்பிக்கப்படும் என்றும் ஏற்கனவே அச்சபை குறிப்பிட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசிடம் அவற்றை ஒப்படைப்பதனால் பலரும் பாதிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. எனவே பாதுகாப்புச் செயலாளரின் சவாலை,சாட்சிகளின் பாதுகாப்பு கருதி மன்னிப்புச்சபை நிராகரித்துள்ளது. இலங்கை அரசு போர்க்குற்றம் எதுவும் நடைபெறவில்லை என்பதில் உறுதியாக இருந்தால் ஏன் சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் எனஇன்னசிட்டி பிரஸ்கேள்வி எழுப்பி இருந்ததையும் இங்கு குறிப்பிடலாம்.
ஐ.தேக. வழமைக்கு மாறாக இம்முறை அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது. மனித உரிமை மீறல், இராணுவ அத்துமீறல், நீதிச் சுதந்திரம் மீறப்படுதல் போன்றவை அடிக்கடி சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளாகும்.
வடக்கில் இராணுவம் குடிசார் கடமைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பெரும் இடையூறு செய்வதாக ஐ.தே.க.வுடன் இணைந்து ஜே.வி.பி.யும் குற்றம் சாட்டிவருகின்றன. வெலிவேரிய சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என ஐ.தே.க. நேரடியாக மனித உரிமை அமைப்பிடமே முறைப்பாடு செய்துள்ளது.
இராணுவ அத்துமீறலை இராணுவத்தினரே விசாரிப்பது சர்வதேச நியதிகளுக்கு முரணானது என சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது யாரும் அறிந்தவிடயம். ஆனால் மேஜர்
ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான விசாரணைக்குழு அறிக்கை விரைவில் வெளிவரும் நிலையிலேயே உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
பெரும்பாலும் திருமதி. நவநீதம்பிள்ளை இலங்கையில் இருக்கும்போதே இந்த அறிக்கையும் வெளியாகலாம் என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில்
, இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோரைக்கண்டுபிடிக்கும் ஆணைக்குழு தமது விசாரணைகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
பொறுப்பாளர் இலங்கையில் இருக்கும்போதே இந்த விசாரணைகளின் பெறுபேறுகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் பாதிக்கப்பட்ட வெலிவேரிய மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்த விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றே குறிப்பிட்டு வருகின்றன.
திருமதி. நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் சாதாரணமானதல்ல என்பதை பல ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்
. அதனால் இலங்கை அரசும் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதும், அவற்றின் தாக்கம் போதுமானதாக இல்லை என்றே சுட்டக்காட்டப்படுகின்றது.
இந்த விசாரணையின் பின், திருமதி. நவநீதம் பிள்ளை தாக்கல் செய்யும் அறிக்கை இலங்கை அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச ஊடகங்கள் சுட்டி;ககாட்டியுள்ளன. சிலவேளை நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு மகாநாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக