திங்கள், 5 ஆகஸ்ட், 2013

” கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு “

" கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு "
நீரடி நீச்சல் படையணியின் சாதனை !
” 1995.04.19 அன்று , தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் உள்ள கடற்படைத்  தளத்தில் ஊடுருவித்தாக்கி , சிறீலங்காக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு அதிவேகப் பீரங்கிப் படகுகளை கடற்கரும்புலிகள் தகர்த்தழித்துள்ளனர். இவ்வெற்றிகரமான தாக்குதலை , விசேட படையணிகளான ” சிலோஜன் ” -  ” அங்கையற்க்கண்ணி ” நீரடி நீச்சல் படையணிகள்தான் மேற்கொண்டுள்ளன. விடுதலைப்ப்புலிகளின் படைவளர்ட்சியில் , மேலே கூறப்பட்ட சம்பவத்தின் ‘ இராணுவப் பரிமாணத்தை ‘ எமது மக்களுக்கு எடுத்து விளக்குவதே , இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஒரு இராணுவ நடவடிக்கையைப் பொருத்தவரையில் அது மேற்கொள்ளப்படும் இடம் , தாக்குதலை நடாத்துவதற்கு தேர்ந்தெடுத்த சர்ந்தப்பம் , நடவடிக்கையில் வெற்றியீட்டுவதன் பொருட்டு எம்மால் குறித்த நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் அல்லது பிரயோகிக்கப்படும்  இராணுவவளம் என்பன முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனவே இவ் வெற்றிகரமான நடவடிக்கையின் பரிமாணத்தை நோக்குவதற்கு , இவற்றைத் தனித்தனியே ஆராய்வதே பொருத்தமாகும்.
தாக்குதல் நடாத்தப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தினைப் பொருத்தவரையில் , தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையானது முற்றாகத் தமது கட்டுப்பாட்டிலேயே உள்ளதென எதிரி கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்ற அதே வேளையில் , இங்கு அமைந்துள்ள துறைமுகமானது உலகிலே பிரசித்தி பெற்ற இயற்கைத் துறைமுகமாகும். 2 ஆம் உலகப் போர்காலகடடத்தில் , பிரித்தானியா பேரரசின் ‘ றோயல் கடற்படை ‘ யால் பயன்படுத்தப்பட்டு வந்த ‘ HMS  Highflyor ‘ எனும் இத்தளம் , 1957 ஒக்ரோபர் 15 ஆம் திகது சிறீலங்காக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது. தேவநம்பியதீச மன்னரின் நினைவாக இத்தலத்திற்க்கு சிறீலங்கா கடற்படை ‘ SLNS Tissa  ‘ எனும் பெயரிட்டு , அத்தளத்தை  கிழக்குக் கடற் பிராந்தியத் தலைமையகமாக்கியதுடன் , சிறீலங்கா கடற்படையின் கப்பல்கள் கட்டும் நிறுவனத்தையும் கடற்படையின் பயிற்சிக்கல்லூரியையும் திருகோணமலையில் நிறுவியது. இவ்வாறு அன்று நிறுவப்பட்டவை அனைத்தும் வளர்ச்சியுற்று , சிறீலங்காக் கடற்ப்படையின் நடவடிக்கைகளுக்கான தலைமையகமாக இன்று விளங்குகின்றன. இதனை வேலைத்திட்டங்களாக சிறுரக கடற்படைப் படகுகளைக் கட்டுதல் , சேவையில் ஈடுபடும் கலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளல் , கிழக்குப் பிராந்திய கடற் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் , புதிதாகச் சேர்க்கப்பட்ட அதிகாரிகள் – சிப்பாய்கள் ஆகியோருக்கான அடிப்படைப் பயிற்சிகள் , துறைசார்ப் பயிற்சிகள் என்பவற்றை வழங்குதல் ஆகியவற்றுடன் , அதிவேகப் பீரங்கிப் படகுகளின் அணி , மற்றும் அதிவேகத் தாக்குதற் படகுகளின் அணி என்பனவும் இங்குதான் நிலைப்படுத்தப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் இத்தாக்குதலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
மேலும் , இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமானது , விடுதலைப் புலிகளின் இராணுவ வரலாற்றில் முக்கிய நிகழ்வேன்றே கூறலாம். அதாவது , இரண்டாம் கட்ட ஈழப்போரின் பின்னர் , சந்திரிக்கா அரசுடன் புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து , தமது கோரிக்கைகளை அரசு நிறைவேறாத நிலையில் , தமது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துக் கூறி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காலக்கெடுவையும் விதித்தனர். புலிகள் விதித்த காலக்கேடுவினைக் கணக்கெடுக்காமல் இருந்த சந்திரிக்கா அரசுக்கு முதலாவதும் , தெளிவுமானாதும் , வெற்றிகரமானதும் , கரும்புலிகளால் நடாத்தப்பட்டதுமான தாக்குதல் இதுவாகும். எனவே , இத்தாக்குதல்  நிகழ்த்தப்பட்ட சர்ந்தப்பமும் வரலாற்றுப் பதிவாகும்.
அடுத்ததாக , இவ்வெற்றிகரமான தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட இராணுவ வளமானது வியக்கத்தக்க தொன்றாகும். அதாவது 1984 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் சிறுதொகை உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ” கடற்புலிகள் ” எனும் சிறு பிரிவானது வளர்ச்சியுற்று , 1991 இல் , ” விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ” எனப் பெயர் சூட்டப்பட்டு , நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்ட பின்னர் , விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையெல்லாம் கடற்புலிகளின் பங்கு இன்றியமையாதது. அது மட்டுமன்றி , கடற்புலிகள் செயற்படத் தொடங்கி ஓரிரு வருடங்களிலேயே பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு , தமிழீழத்தின் குறிப்பிடக்கூடியளவு கடற் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர் ; இதனை எதிரிகளின் இராணுவ ஆய்வாளர்கள் கூட இன்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஆனால் , உலகிலேயே பாரிய கடற்படைகளைக் கொண்டிருக்கும் நாடுகளைத் தவிர , கடர்படையென்ற ஒன்றைக் கொண்டிருக்கும் அனைத்தூச் சின்னஞ்சிறு நாடும்கூட – அவை அளவிலும் ஆற்றலிலும் மட்டுப்படுத்திருந்தபோதும் – ஏதாவதொரு வகையில் தமக்க்கெனவோர் விசேடபடையணிகளை , கடலில் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக உருவாக்கியுள்ளன. இவற்றில் குறிப்பிட்டுக் கூறக்கூடியவைகளாக…
* அமெரிக்கக் கடற்படையின் விசேட நடவடிக்கை குழுவான  – ‘ சீல் ‘ ( Seal )
* சோவியத் கடற்படியின் சிறப்புக் குழுவான – ‘ ஸ்பெற்நாஸ் ‘ ( Septsnaz )
* பிரித்தானியக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் – ‘ றோயல் மரீன்கள் ‘ ( Royal Marines )
* கிழக்கு யேர்மனியின் கடற்படை மற்றும் காலாட்படைச்  சிறப்பணியின் – ‘ ஏண்ஸ் மொறிற்ஸ் ஆண்ற் ‘ ( Ernts Moritz Arnd )
* போலந்து நாட்டுக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவான – ‘ லுசிக்கா ‘ ( Luzycka )
* இத்தாலி நாட்டுக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவான – ‘ கம்மா ‘ (கம்மா )
* சுவீடன் நாட்டுக் கடற்படையின் விசேட இடுபணிக் குழுவான – ‘ றேஞ்சர்ஸ் ‘ ( Rangers )
போன்றவை உள்ளன.
இவை யாவும் வல்லரசு நாட்டு கடற்படையணிகளின் சிறப்புநடவடிக்கைக் குழுக்கலாகவுள்ள போதும் , இவர்களனைவரும் சாதாரண நீராடிச் சுழியோடிகளாகவும் செயற்படுகின்றனர். இவ்வாறான விசேட படையணியிலுள்ள உறுப்பினர்களை  ‘ தவளை மனிதர்கள் ‘ ( Frogmen ) என அழைப்பார்கள். மேலே கூறப்பட்ட இவ்விசேட படையணிகளது செயற்பாடானது , 2 ஆம் உலக மகாயுத்தத்தின் வெற்றியினைத் தீர்மானித்ததும் இதுவரை உலகில் இடம்பெற்றவ்றில் பாரிய கடல்தரையிறக்க நடவடிக்கையுமான ‘ நோர்மண்டி தரையிறக்கத்தில் ‘ நேசநாட்டுப் படையணிகளாலும் ; அதன் பின்னர் இடம்பெற்ற பனிப்போர்க் காலத்திலும் ; 1980 இன் ஆரம்பங்களில் இடம்பெற்ற வளைகுடா யுத்தம் , போக்லண்ட் யுத்தம் ஆகியவற்றில் ; 1990 களின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ‘ பாலைவனபுயல் ‘ நடவடிக்கைகளிலும் மாபெரும் வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தன. இப்பிரிவனர் தமது பிரதான இடுபணியை நிறைவேற்றுவதன் பொருட்டு நீரடி தகர்ப்புக் குழுக்களை ( Underwater Demolition Teams – UDT ) எனும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவர்களது மேலதிக பணிகளாக – எதிரிகளால் தமது பிரதேசத்தினுள் மேற்கொள்ளப்படும் தரையிறக்க நடவடிககிகளின் போது , அவற்றை முறியடிக்க கரையோரப் பிரதேசங்களில் ஊடுருவிப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தல் ; எதிரிகளின் கப்பலணிகளின் பின்னால் தொடர்ந்து சென்று எதிரியின் நகர்வுப்பாதைகள் , கப்பல்களின் தொழினுட்பம் பற்றிய வேவுகள் அறிதல் ; தமது பிரதான கடற்கலங்கள் , கடற்தளங்கள் என்பவர்ரியா எதிரியிடமிருந்து பாதுகாத்தல் ; தம்மால் மேற்கொள்ளப்படும் தரையிறக்கம் ஒன்றின்போது தமது துருப்புக்களுக்குப் பாதுகாப்பு வழங்கல் ; எதிரியின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம்  வாய்ந்த பிரதேசத்தினுள் ஊடுருவி , பிரதான இலக்குகள் மீது தீடிர் தாக்குதல்களை மேற்கொள்ளுதல் போன்றவையும் அடங்கும். இவ்வாறான தமது பணிகளுக்காக , இவர்கள் நீரடி நீச்சளுக்கான ‘ ஸ்குபா ‘ உபகரணம் , ( Scuba – Single Cylinder Underwater breathing Aparataus ) மற்றும் கடலினுள் பயன்படுத்தப்படும் ‘ ஸ்கூட்டர் ‘ ( Sea Scooter ) மற்றும் காற்றடிக்கும் படகுகள்  ( Baloon Boats ) சிறுரக நீர்முழ்கிகள் ( Midgt Submarines )  நீரடி வாகனங்கள் ( underwater Vehicles ) நீரடியில் பயன்படுத்தப்படும் கைத்துப்பாக்கிகள் ( underwater  Pistol ) என்பவற்றையே பயன்படுத்துகின்றனர்.
இந்தவகையில் இவர்களைப் போல அளவிலும் ஆற்றலிலும் , இராணுவ வளங்கள் குறைவாகவே உள்ள நிலையிலும் கூட , கடற்புலிகளின் சிறப்பு பிரிவான ” சிலோஜன்  நீரடி நீச்சல் படையணியும் ” – ” அங்க்கையற்க்கண்ணி நீரடி நீச்சல் படையணியும் “  தமது எதிரிக் கடற்படையான சிறீலங்காக் கடற்படைக்கு முகம் கொடுத்து , இன்று வெற்றிவாகை சூடியுள்ளன. சிறீலங்காக் கடற்படையிலும் சூழியோடிகள் பிரிவொன்று நிறுவப்பட்டு , இந்தியாவில் உள்ள கொச்சின் , வெந்துருகி ஆகிய இடங்களில் பயிற்சி பெற்ற , 75 பேருக்குக் குறையாத ஆள்தொகையைக் கொண்டுள்ளபோதும் , கடற்புலிகளின் விசேட பிரிவுகளிடமிருந்து தப்புதல் என்பது அதிர்ஷ்டத்துக்குரிய ஒன்றாகும் !
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக