புதன், 7 ஆகஸ்ட், 2013

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை!

தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மேற்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சியில் மாவட்ட இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் பசும்பொன்ராஜா(35). இவர் ஆர்.கே.பேட்டையில் நடந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பினார்.அகூர் பேருந்துநிலையம் அருகே பசும்பொன்ராஜா வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: