திங்கள், 5 ஆகஸ்ட், 2013



  • புலிகளை இழிவுபடுத்தி திரைப்படமா ? ஓட விடமாட்டேன்: சீமான் ஆவேசம் !

    விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி, தயாரிக்கப்பட்டுள்ள இத் திரைப்படத்தை தமிழ் நாட்டில் திரையிட த...ான் அனுமதிக்கப்போவது இல்லை என்று செந்தமிழன் சீமான் அவர்கள் சற்று முன்னர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார். மட்ராஸ் கஃபே என்னும் இத்திரைப்படம் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடையமாகப் பயன்படுத்தியதாகவும், தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் சித்தரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை, இழிவுபடுத்தும் இத்திரைப்படத்துக்கு தமிழ் நாட்டில் தடை பிறப்பிக்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி இன்று கோரிக்கை விடுத்துள்ளதோடு, அது சட்ட நடவடிக்கையும் எடுக்கவுள்ளது என அவர் மேலும் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்தார்.

    இதேபோல், மெட்ராஸ் கஃபே படத்துக்கு தடை விதிக்க கோரி தமிழீழ மாணவர்கள் கூட்டமைப்பும் சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது. இத் திரைப்படத்தை உலகளாவிய ரீதியில் தடைசெய்யவேண்டும் என்று, கனடாவில் உள்ள அமைப்புகள் தெரிவித்துள்ளார்கள். இப் படத்தின் கதாநாயகனும், இயக்குனருமான ஜோன் ஆபிரகாம், பல தடவை இலங்கை சென்றுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் மகிந்தர் மற்றும் ஷிராணி ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு விருந்துண்டு மகிழ்து உள்ளார். எனவே அவர்களின் அழுத்தத்தின் பெயரிலேயே அவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளதாகவும், காமன்வெலத் மாநாடு நடைபெற முன்னர், இதனை திரையிடுமாறு மகிந்தர் வேண்டிக்கொண்டதுக்கு அமைவாகவே அவர் இப்படத்தை தற்போது திரையிட உள்ளார் என்றும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: