வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

வேகத்தடை என்பது வீதிக்கே தவிர விடுதலைக்கு அல்ல வீறுகொண்டெழுவோம் வீராதி வீராதி வீரர்களாய் -ஆதித்தன்

பொங்கு தமிழரென பொங்கி எழுவோம்!! எமை தடுத்திடும் தடைதனை தகர்த்தினி நடப்போம்!! நாடென்ன காடென்ன களம்தனில் குதித்து நாம் இழந்தமண் மீட்டிட இன்றென விரைவோம்,!! வருக!! வருகவே!! விறைத்த தோழ்களே!!
 
விடுதலை விடுதலை என்று விரதங்கள் பல இருந்து வீழாத மரமான எங்கள் ஈழதேசம் வஞ்சகரின் வரவுகளால் வீழ்ந்து போனாலும் அதை விழுதுகளாக தாங்கிப்பிடிக்கவேண்டியது ஒவ்வொருதமிழ் மகனுக்கும் காலம் இட்ட கட்டளை என்றே கூறுவதில் தவறில்லை. இனம் காக்க அன்றைய இளையசமுதாயம் இரத்தவெள்ளத்தில் வேட்டையாடி வெளிநாடுகள் பலதிலும் தம் வீரமுத்திரைகளை பதித்து விண் அளந்த விஞ்ஞானிகளாகவும் மண் அளந்த மெஞ்ஞானிகளாகவும் திரும்பிப்பார்க்காத உலகத்தை ஒருமுறை உற்றுப்பார்த்து வியப்படயவைத்து ஈழக்கனவுடன் ஈண்றமண்ணுக்குள்  விதைக்கப்பட்ட வித்துக்களாகிப்போனார் ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்பார் ஆனால் இந்த ஆறடி நிலம்கூட இன்று இவர்களுக்கு இல்லை!!
நான்கு பக்கமும் கடல் சூழ்ந்து  தப்பியும் ஓடமுடியாத உலகத்தின் மிகப்பெரிய சிறைச்சாலையான சிறீலங்காவுக்குள்ளே!! எங்கள் உறவுகள் இன்று வாழ்ந்துகெண்டிருக்கின்றனர்.
 
 வாடிய பயிரைகண்டும் வாடித்துடிக்கும் தமிழன் இன்று வதைமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருப்பது எத்தனைகண்களில் படுகின்றது என்பது தெரியவில்லை. உப்பு காற்றுவீசிய கடற்கரைகளும் உதிரத்தின் வாடையை வீசிக்கொண்டிருக்க இலங்கை அரசின் ஏவல் பொம்மைகளாக இன்று எங்கள் சொந்தங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற அதே சமகாலத்தில் புலம்பெயர்ந்த தேசம் எங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களாகிய நாங்கள்  செய்யவேண்டியது "காலம் அறிந்து செயற்படு" என்பதைப்போல் மாறிவரும் உலகத்துடன் எங்களையும் நாங்கள் மாற்றிக்கொண்டு மாறாத பாதையிலே எங்கள் விடுதலைப்பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்லவேண்டுமே தவிர முடங்கிக்கிடப்போமேயானால் இனி வரலாற்றில் தமிழினம் முதுகொலும்பற்ற நிலையில்தான் இருக்கவேண்டும்.

எந்த ஒரு தாக்கத்துக்கும் மறுதாக்கம் என்பது நிச்சயம் உண்டு ஆனால் இலங்கைத்தீவுக்குள் எம் சொந்தங்கள் எந்த ஒரு தாக்கத்துக்கும் மறுதாக்கத்தை கொடுக்க முடியாத நாணல் புற்களாக அடக்குமுறை என்ற காற்று வீசும் திசையில் எல்லாம் சாய்ந்துகொண்டிருக்கின்றனர் ஆனால் அங்கு ஏற்படும் தாக்கங்களுக்கு மறுதாக்கத்தை ஏற்படுத்தவேண்டியவர்கள் புலம் பெயர்தமிழர்களாகிய நாங்கள். ஈழத்தில் சிறு மின்னல் ஏற்பட்டால் புலத்தில் இடிமுழக்கமாக மறுதாக்கத்தை ஏற்படுத்தி இலங்கை அரசபயங்கரவாதிகளை அடக்கி ஒடுக்கவேண்டியது புலம்பெயர்ந்த தமிழர்களின் கடமையும் கட்டாயமும் என்பதனை யாரும் மறந்துவிடவோ மறுத்துவிடவோ முடியாது.

"கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை" என்பார்கள்  ஆனால் தமிழர்விடயத்தில் கண்கெட்ட குருரர்கள் முன்னே அதுவும் பொய்யானது. எவர் என்ன சொன்னால் என்ன? எவர் எம்மை தடுத்தால் என்ன?எமது விடுதலை எமக்கு வேண்டும் நீதிதவறிய உலகத்தை தட்டி எழுப்புவோம் எமக்கான நீதி கிடைக்கும்வரை உறக்கத்தை கலைத்து ஊருராய் படை திரட்டுவோம் இது ஆயுதப்போர் அல்ல அறப்போர் அன்னை மண்மீட்கும் புனிதப்போர் அடக்குமுறைக்கும் அனியாயத்துக்கும் எதிரான போர். வேகத்தடைகளை வீதிகளில் போட்டு வேகத்தை குறைக்கலாம் விடுதலைப்புயல்களின் வேகத்தை தடுக்கும் வேலிகளும் சாய்ந்து போகட்டும்.

உலகத்தின் உறக்கத்தை கலைத்து உன்மையினை உரக்கச்சொல்வோம் ஐநா சபைமுன்னே அணிதிரண்டெளுவோம், மீண்டும் ஒருமுறை எங்கள் பலத்தையும் ஒற்றுமையையும் கண்டு உலகம் மிரளட்டும். கூட்டினை இழந்தாலும் தேனீக்கூட்டங்கள் ஓய்ந்து போவதில்லை தேனீக்களாய் புது இராச்சியம் அமைப்போம்  நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல அப்படி நம்மை பயங்கரவாதிகள் என்று சொல்லும் பயங்கரவாதிகளுக்கே நாம் பயங்கரவாதிகளாவோம் கோழத்தமிழன் அல்ல நாங்கள் வாளேந்தி நின்றகூட்டம் ஒன்ற்றுமைதான் இனி எங்களின் ஆயுதம் தனித்து தனித்து நின்று தவிப்பு நிலை வேண்டாம் ஒன்றுபடுவோம் ஓங்கிக்குரல்கொடுப்போம் இது காலத்தின் கட்டளை.

பாதகம்செய்வோரைக்கண்டால் பயம்கொள்ளவேண்டாம் என்ற பாரதியின் பிள்ளைகளையும் பாதகரின் முகத்தில் காறி உமிழ்ந்திடசொல்வோம் பூட்டிய கதவுகள் திறக்கடும் சுதந்திர தேசம் மலரட்டும் நம்பிக்கை கொண்டு நாட்களை நமதாக்கி நாளை விடியலின்  ஈழமண்ணில் கண் விழிப்போம்.இன்று இது ஒரு  சம்பவம் இதுவே நாளை சரித்திரம் ஆகட்டும் தமிழா தாயின் மார்பிலே குடித்தது பச்சைத்தண்ணீர் அல்ல  பதுங்கிக்கிடவாதே எழுந்துவா.
“நாம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இனவாதக் கொடுமைக்கு எதிராக, அரச பயங்கரவாத வன்முறைக்கு எதிராக நாம் விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம். எமது போராட்டம் ஒரு தீர்க்கமான, நியாயபூர்வமான அரசியல் குறிக்கோளைக் கொண்டது. ஐநா சாசனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுய நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.”
- தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் -
ஐ.நா வளாகம் நோக்கி அனைவரும் ஒன்று கூடுவோம் எமக்கான விடுதலையை நோக்கி .
மாண்ட வீரர் மானம் காக்க எம்மை அழித்த பகைவனை நீதி தண்டிக்க நீட்டுவோம் கரங்களை எழுப்புவோம்

கருத்துகள் இல்லை: