வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை

கலப்பு தமிழ் வேண்டாம். தூய தமிழில் பேசுவோம். சென்னை மெரினாவில் பரப்புரை.
இன்றைய தமிழ் சமுதாயத்தில் நம் அன்றாட வாழ்வில் தமிழோடு ஆங்கிலம் தவிர்க்க முடியாத அளவு கலந்துவிட்டது. கலப்பு தமிழ் பத்திரிக்கை, திரைப்படம், தொலைக்காட்சி என எதையும் விட்டுவைக்க வில்லை .மாணவர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் வரை கலப்பு தமிழில் தான் பேசுகின்றனர். குழந்தைகளும் கலப்புதமிழ் தான் உண்மையான தமிழ் என நம்பி அதையே பேசி பழகி வருகின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டியபொறுப்பு அனைத்து தமிழ் மக்களுக்கும் உள்ளது. இதை இப்படியே நடைமுறையில் விட்டுவிட்டால் , நாளை தலைமுறை தமிழேபேசமுடியாமல் ஆங்கிலம் மட்டுமே பேசும் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. இதை மாற்றும் பொருட்டு பொது மக்களுக்குவிழிப்புணர்வு கொடுக்க தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் தீவிர பிரச்சாரம்மேற்கொண்டனர். பலதரப்பு மக்களையும் சந்தித்து அவர்களிடம் தூய தமிழில் பேச ஊக்கம் கொடுத்தனர். அவர்களிடம் தூய தமிழ்பேசும் போட்டியும் நடத்தினர். அவர்களிடம் இது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தி காணொளியாக பதிவும் செய்தனர்.
பின்பு அவர்கள் தூய தமிழுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் "தூய தமிழில் பேசுவோம் " என்ற பதாதையை ஏந்த வைத்துபுகைப்படமும் எடுத்தனர். பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் தூயதமிழில் உரையாடினர் . மற்றவர்களுக்கும் இது குறித்துசொல்வோம் என உறுதி அழைத்தனர்.
முடிவில் 'தமிழில் பேசுவோம் தமிழாராய் இணைவோம் என்ற பசை ஒட்டியை கடற்கரையில் கூடிய பல நூறு மக்களிடமும்,கடைகளுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் கொடுத்தனர். வாழ்க தமிழ் என்ற வாசகம் அடங்கிய பசைஒட்டிகளும்விநியோகிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக