புதிய வரலாறு எழுதிட வாடா….
கவிதை
தோழனே எழுந்து வாடா
துன்பங்கள் இல்லையடா
விழிகளை திறந்து விட்டால்
விடுதலை உன் கையின் எல்லை
தலை நிமிர்ந்து நீயும்
எழுந்து வாடா
தரணியே உனக்காய்
காத்திருக்குது
வெற்றியெல்லாம் உனக்கு
குடைபிடிக்கும்
தடையெல்லாம் உனைக் கண்டால்
பொடிப் பொடியாய் பறக்கும்
இருளுக்கு விடை கொடுத்து
உதயத்தில் முகம் காட்டு
உன்னிடமே உலகமுண்டு
உருட்டி நீ விளையாடு
தொலைந்தவை எல்லாம்
தோல்விகளே
இழந்தவை எல்லாம்
துயரங்களே
சாதிக்கப் பிறந்தவனே
சரித்திரத்தை நீ யெழுது
உணர்விலே உரமேந்தி
இமயத்தை நீ முட்டு
வா வா புதிய இளைஞனே
புயலாய் புறப்பட்டு வாடா
இடி மின்னலும் மழையும்
உனக்காய் பரணி பாடும்
கொள்கையில் மலைபோல
உயர்ந்திட வாடா
வெற்றிக்கு குடைபிடிக்க
காலம் உன்னை அழைக்கிறது
புதிய வரலாறு எழுதிட
வானம் இதழ் விரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக